தாமரைப் பெண்னே

கண்டேன் தாமரைப் பெண்னே உன்னிடம்
நிலவின் குழுமையை உன் விழிகளிலும்
பாலின் தூய்மையை உன் மனதிலும்
இளம் சிவப்பு தாமரையின் அழகை உன் செவ்விதழ் உதடுகளிலும்
வெண் தாமரையின் மென்மையை உன் பாதங்களிலும்
கார் மேகத்தின் கருமையை உன் கருவிழிகளிலும்
அமேசான் காட்டின் அடர்த்தியை உன் கூந்தலிலும்
குயிலின் இசையை உன் இனிய குரலிலும்

மயிலின் நாட்டியத்தை உன் அன்ன நடையிலும்
துளசி்ச் செடியின் புனிதத்தை உன் நற்குணத்திலும்
கண்டேன் பெண்னே !, இத்தனை அழகையும் கண்ட என் மனது ஏனோ
உன் மனதையும், குரலையும் தான் அதிகம் நேசி்க்கிறது
தாமரைப் பெண்னே.

சுப்ரபாதம் கேட்கிறேன் உன் குரலில்

சுப்ரபாதம் என்பதால்
பக்தி வளர்த்தேன் உன் குரலில்

போதி மரம் என்பதால்

ஞானம் பெற்றேன் உன் நிழலில்

இறை அடி என்பதால்

முக்தி அடைந்தேன் உன் பாதத்தில்

சின்ன சின்ன ஆசை
வைகறை,காலை,நண்பகல், ஏற்பாடு, மாலை,யாமம் எனும் ஆறு பொழுதிலும் உன்னருகே இருக்க ஆசை

வைகறைப் பொழுதில்
தாமரைக்கு தேநீர் போட்டு கொடுக்க ஆசை
மல்லிகையுடன் சேர்ந்து கோலம் போட ஆசை
காலைப் பொழுதில்
தேன் கலந்த அமுதை ஊட்டி விட ஆசை ...
நண்பகல் பொழுதில்
அப்புவிடம் பேசிக் கொண்டிருக்க ஆசை
ஏற்பாடு பொழுதில்
நிலவு முகத்தை பார்த்துக் கொண்டிருக்க ஆசை
மாலை பொழுதில்
மலர் பாதத்திற்கு மருதானி வைத்து விட ஆசை
இரவு(யாமம்) பொழுதில்
அம்முவை தாலாட்டு பாடி தூங்க வைக்க ஆசை
தூங்கும் அழகை கண்-இமைக்காமல் பார்க்க ஆசை

சீதைக்கேற்ற ராமன்

தாமரையே உன்னை
என் காதலியாக பார்ப்பதைவிட
என் மனைவியாக பார்க்கவே ஆசை
ஏனெனில் உனக்கு நான்
சீதைக்கேற்ற ராமனாக  இருக்க விரும்புகிறேன்
கிரீஷ்ணணாக அல்ல

பேசிவிடு 

உன் திருவாய் மலர்ந்து பேசிவிடு
நீ மலர மரமாய் துணை நிற்கிறேன்
உன் நிலவு முகத்தை காட்டு
நீ உறங்க தாலாட்டு பாடுகிறேன்
உன் இதயத்தை எனக்கு கொடு
நீ குடியிருக்க ஆலயம் கட்டுகிறேன்
உன் மலர் பாதம் அருகே இடம் கொடு
இறுதிவரை உனக்கே பணி செய்து கிடப்பேன்